www.garudabazaar.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE'.. அமெரிக்கால இத்தனை தியேட்டர்ல ரிலீசா? மாகாணம் வாரியா லிஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'PRINCE' படம் ரிலீசாகும் அமெரிக்க தியேட்டர்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

Also Read | Chandramukhi 2 : சந்திரமுகி ஷூட்.. பிரபல இந்திய சினிமா டெக்னீசியன் திடீர் விசிட் ..

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த அமெரிக்க உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

இந்த படம் தமிழ் & தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கில் 140 திரைகளிலும் தமிழில் 203 திரைகளிலும் ரிலீஸ் ஆகிறது. மாகாணங்கள் வாரியான திரையரங்குகள் விவரங்களும் வெளியாகி உள்ளன.

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | உலகின் மிகப்பழமையான நாட்டில் ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தான் போயிருக்காங்களா? செம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Prince Movie USA Theatre List and Count

People looking for online information on Prince Movie, Prince Movie USA Theatre List, Sivakarthikeyan, SivaKarthikeyan Prince Movie will find this news story useful.