www.garudabazaar.com

பாண்டிச்சேரியில் உங்களுக்கு பிடிச்ச இடம் எது? ரசிகரின் கேள்விக்கு 'செம' பதில் அளித்த SK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன்,  'PRINCE' படத்தின் ரிலீஸை ஒட்டி டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

SivaKarthikeyan Answered the question regarding favourite place in Pondicherry

Also Read | "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்".‌. வெங்கட் பிரபு கேள்விக்கு SK அளித்த சூப்பர் பதில்!

ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.

இந்த ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

SivaKarthikeyan Answered the question regarding favourite place in Pondicherry

ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரித்துள்ளனர்.

SivaKarthikeyan Answered the question regarding favourite place in Pondicherry

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "பாண்டிச்சேரியில் உங்களுக்கு பிடிச்ச இடம் எது? ப்ரின்ஸ் படத்தின் பாண்டிச்சேரி படப்பிடிப்பில் உங்களுக்கு பிடித்த தருணம் எது? " என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "இதற்கு முன் நிறைய படங்கள் பாண்டிச்சேரியில் எடுத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் பாண்டிச்சேரி வரும்  போது (தமிழகத்திலும்) அங்குள்ள மக்கள் கொடுக்கும் அன்பும் ஆதரவும் தான் எப்பொழுதும் ஞாபகம் வரும்" என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

 

Also Read | முழு டபுள் ஆக்சன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன மாஸான பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan Answered the question regarding favourite place in Pondicherry

People looking for online information on Pondicherry, Prince, Sivakarthikeyan will find this news story useful.