நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ப்ரணிதாவின் போட்டோஷூட் . வைரல் ஆகும் ஃபோட்டோஸ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

Also Read | அப்படி போடு.. விக்ரம் ஆல்பத்துல கமலுக்கு புடிச்ச பாட்டு இதான்.!.. அவரே சொன்ன பதில்..

குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா  நடிப்பில்  வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார்.

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா   நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

தன்னுடைய கணவரின் 34 ஆவது பிறந்தநாளில், அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரணிதா, ரசிகர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

இந்நிலையில் நடிகை ப்ரணிதா, நிறைமாத கர்ப்பத்துடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ப்ரணிதாவின் கணவரும் போட்டோஷூட்டில் தோன்றியுள்ளார்

Also Read | பரதநாட்டியம் ஆடி அசத்திய DD.. அதிலேயும் அந்த ரியாக்சன்ஸ் தான் ஹைலைட்ஸ்.! வைரல் வீடியோ

Pranitha Subhash Latest Pregnancy Photo shoot went viral on social media

People looking for online information on Pranitha Subhash, Pranitha Subhash Latest Pregnancy Photo shoot will find this news story useful.