www.garudabazaar.com

பிரபல கோயிலில் குழந்தைக்கும் கணவருக்கும் மொட்டை.. நடிகை பிரணிதா வெளியிட்ட போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரணிதா, பிரபல கோயிலில் தனது குழந்தை & தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Pranitha Subhash with Her Husband and Daughter at Tirupati

Also Read | சினிமா தியேட்டரில் அழும் குழந்தைகளுக்கு.. கேரள அரசு கொண்டு வந்துள்ள சூப்பர் திட்டம்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை பிரணிதா சுபாஷ் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

Pranitha Subhash with Her Husband and Daughter at Tirupati

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா  நடிப்பில்  வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

Pranitha Subhash with Her Husband and Daughter at Tirupati

திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் பிரணிதா   நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

பின்னர் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கடந்த ஜூன் மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது என அறிவித்தார். குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதன் பின்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா தற்போது தனது குழந்தை & கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Pranitha Subhash with Her Husband and Daughter at Tirupati

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது கணவர் & குழந்தைக்கு மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். தனது கணவர் & குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "என இரண்டு மொட்டை குழந்தைகள்" என தலைப்பிட்டுள்ளார். திருப்பதி தாஜ் ஹோட்டலில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Also Read | BABA : ரஜினி நடிப்பில் பாபா ... வந்தாச்சு அதிகாரப்பூர்வ ரீ ரிலீஸ் தேதி.. வேகமாக புக் ஆகும் TICKETS..

தொடர்புடைய இணைப்புகள்

Pranitha Subhash with Her Husband and Daughter at Tirupati

People looking for online information on Pranitha Subhash, Pranitha Subhash at Tirupati, Tirupati will find this news story useful.