கொரோனா குறித்து பிரகாஷ் ராஜ் தனது குட்டிப் பையனுடன் வெளியிட்ட வீடியோ - செல்லம் ஐ லவ் யூ !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சில இடங்களில் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல் உள்ளது. அவர்களை போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கி திரும்பி போகச் செல்கின்றனர். மேலும் மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம், கை, முகங்களை சோப் உபயோகித்து நன்றாக கழுவுங்கள் என்று அரசும், மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. மேலும் பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு தரும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''வைரஸ் நகராது. நாம் தான் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டில் இருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்பானவர்களாக இருங்கள். அரசு அதிகாரிகளுக்கு உதவுங்கள். என் மகனுடன் சில தருணங்கள்'' என்று தனது மகனுடன் தேசியகீதம் பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
#COVID2019india #kuchkarona The VIRUS doesn’t move .. WE the PEOPLE move it .. STAY HOME.. HELP those around you .. BE RESPONSIBLE..HELP THE AUTHORITIES..a moment with my son.. 🙏THINK OF THEIR FUTURE #JustAsking pic.twitter.com/GWsstFgmxp
— Prakash Raj (@prakashraaj) March 29, 2020