www.garudabazaar.com

“காயப்படுத்தினால் மன்னிப்பு கோருகிறேன்”.. டைட்டில் கார்டு சர்ச்சை.. பிரபு சாலமன் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மைனா, கும்கி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் இயக்குனர் பிரபு சாலமன்.

Prabhu Solomon Sembi press meet Kovai Sarala Ashwin

இவரது இயக்கத்தில் அடுத்ததாக 'செம்பி' திரைப்படம், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகி உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகர் அஸ்வின் குமார் இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல, நடிகை கோவை சரளாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். வயதான கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் கோவை சரளா ட்ரைலரில் தோன்றியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

Prabhu Solomon explanation about sembi movie Title card

இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்தது. அஸ்வின் குமார், கோவை சரளா, தவிர தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்க, எம். ஜீவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் சிறப்புத் திரையிடலின்போது, டைட்டில் கார்டில், “film by பிரபு சாலமன் இயேசு என போட்டிருக்கிறீர்கள்?” என பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

Prabhu Solomon explanation about sembi movie Title card

இதற்கு பதில் அளித்த இயக்குநர் பிரபு சாலமன், “கிறிஸ்தவம் ஒரு மதமும் கிடையாது. மதத்தை பரப்ப இயேசு வரவும் கிடையாது. அன்பு மட்டுமே எங்களுடய நோக்கம். அதையே நாங்கள் படத்தில் சொல்லி இருக்கிறோம். மதமாக நான்  பார்க்கவில்லை. நான் படித்து பழகி சிறு வயது முதலே கிறிஸ்தவனாக வளர்ந்தேன். உங்களை அது காயப்படுத்தினால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களில் ஒருவன், நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Solomon Sembi press meet Kovai Sarala Ashwin

People looking for online information on Prabhu Solomon, Sembi, Title Card will find this news story useful.