"Every Sunday மகனை பார்ப்பீங்களோ?".. கமல் சர்ப்ரைஸ் Gift.. கண்கலங்கிய அசீம்..!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகைபுரிந்திருந்தனர். இதே போல, ADKவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். இப்படி பிக்பாஸ் வீடு கலகலப்புடனும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் நிறைந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது அசீம்,"அப்பா, அம்மா வருவாங்கன்னு நெனச்சேன். ஆனா அவங்க வரல. என்னுடைய மகன் ரயான் வருவான்னு நெனச்சேன். குறும்பா பாடல் போடும்போது, துருவ் வந்தாரு. அப்போ, எமோஷனலா இருந்துச்சு. ரயான் வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க. அவனை ரொம்ப மிஸ் பண்ணேன். இருந்தாலும் என் தம்பி வந்தது சந்தோஷமா இருந்துச்சு. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்-னு சொல்ற மாதிரி பல நேரத்துல எனக்கு சப்போர்ட்டா என் தம்பி இருந்திருக்கான்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட கமல்,"இந்த நிகழ்ச்சிக்கு வரலைன்னா ஞாயிற்றுக்கிழமை உங்க பையனை மீட் பண்ணுவேன்னு சொன்னீங்க. ஸ்டோர் ரூம்ல ஒரு பொருள் இருக்கு. எடுத்துட்டு வாங்க" என்கிறார். அசீம் அதனை எடுத்துவர, அதனை பிரிக்கும்படி சொல்கிறார் கமல். அதனை அசீம் பிரிக்க, போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அதனுள் அசீமின் மகன் ரயானின் புகைப்பட பிரேம் இருப்பதை கண்டு அசீம் நெகிழ்ச்சியடைந்து கமலுக்கு நன்றி சொல்கிறார். அப்போது பேசிய கமல், ADK-விற்கும் இதுபோலவே முயற்சித்ததாகவும் ஆனால் நடக்கவில்லை என்கிறார். அசீம் பேசுகையில்,"இப்படி ஒரு மேடையில் அதுவும் கமல் சார் முன்னாடி என்னுடைய மகனின் புகைப்படத்தை பிரேம் செய்து கொடுத்ததுக்கு நன்றி" என கூறுகிறார். தொடர்ந்து, ADK-வும் தனது மகனுடைய புகைப்படத்தை கொண்டுவர முயற்சி செய்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Azeem And Amudhavanan Argument Over Janany Elimination
- Myna Nandhini Say Vikraman In Finals Azeem Questions
- Azeem Speak Bigil Vijay Dialogue About Bigg Boss Finale
- Azeem Questions About How Vikraman Enter Finale To Adk
- Vikraman Azeem And Amudhavanan Speech In New Task Bigg Boss
- Azeem Friend Wish Vikraman Amudhavanan And Housemates Reaction
- Vikraman Father To Azeem About His Angry Speech Bigg Boss
- Azeem Argument Over Rachitha Statement About Him In Biggboss
- Azeem Slips In Bigg Boss House Kathiravan Get Fear
- Azeem And Kathiravan About Shivin Wig Bigg Boss House
- Azeem Met With His Family Members In BiggBoss House
- Azeem Self About His Play In Bigg Boss 6 Tamil பிக்பாஸ் அசீம்
தொடர்புடைய இணைப்புகள்
- "LOVE Failure ஆகிடுச்சு💔 அவரு எனக்கு கிடைக்க மாட்டாரு 😭 ஆனா, Azeem"... Rojasree Open Heart Interview
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- "MYNA, நீ Bigg Boss-க்கு லாய்க்கே இல்ல.." Upset ஆன Myna Husband Yogesh
- ஓய்வு எடுக்க வேண்டிய வயசா? 63 வருஷமா எனக்கு பிடிச்சதை செய்யுறேன் 🔥Kamal Mass At Vikram Success Meet
- "Azeem நீ நடிகனே இல்ல 😡 மன்னிப்பு கேட்கணும்" - Devipriya Reveals Real Shooting Spot Secrets
- Bigg Boss-லிருந்து வீடு திரும்பிய Ram Ramasamy... மலர் தூவி கொண்டாடி தீர்த்த குடும்பத்தினர்
- "நீங்க போட்ட அந்த பிச்சை தான் நான் இன்னைக்கு இங்க இருக்கேன்"... Housemates முன்னே கண்கலங்கிய KAMAL
- "இத யார்ட்டயும் சொல்லமாட்டேனு சத்தியம் பண்ணு"... Kathir பற்றி Dhana-விடம் பேசிய Shivin
- "ஒருத்தர் பேசும் போது கைவச்சது மிகப் பெரிய தப்பு"... Azeem முகத்துக்கு நேரா சொன்ன Vikraman
- BP அதிகமாகி மயக்கம் போட்டு தரையில் விழுந்த Azeem... செய்வதறியாமல் பதறிப்போன Housemates
- என்ன எட்டி உதப்பேன்னு சொல்ற, ரவுடித்தனம் பண்றியா 😡😡 Azeem மீது கடுப்பில் Amudhavanan
- நீங்க எங்களுக்கு எப்பவுமே ஆண்டவர் தான்... பார்க்காத போதும் Kamal-ஐ பயபக்தியுடன் கும்பிட்ட PUGAZH