www.garudabazaar.com

இசைப் புயல் AR ரஹ்மானின் புத்தாண்டு வாழ்த்து.. அவரே பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய திரை இசையின் முன்னணி அடையாளமாக விளங்குபவர்களுள் ஒருவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

Music Director AR Rahman shares New Year Wishes To his Fans

தமிழ் திரைத்துறையில் இருந்து சென்று உலகளாவிய தமிழர்களையும் பெருமைப்படுத்திய இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் அண்மை காலத் திரைப்படங்களாக வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் இசை வரவேற்பையும் பெற்றன.

1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக கால்பதித்தார் ரஹ்மான். அதனை தொடர்ந்து பல படங்களில் இவருடைய இசையை கேட்டு ரசிகர்கள் உருகிப்போயினர். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழி படங்களிலும் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரஹ்மானை அவரது ரசிகர்கள் இசைப்புயல் என அன்புடன் அழைக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரஹ்மான் எப்போதுமே தம் ரசிகர்களுக்கு பண்டிகைகளில் மறவாமல் வாழ்த்துக்களை சொல்வார். அந்த வகையில் தற்போது புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து ஏ ஆர் ரஹ்மான் ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஏ ஆர் ரஹ்மான் ஒரு படகு ரெய்டு சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. யாருடைய முகமும் அந்த வீடியோவில் தென்படவில்லை என்றாலும் படகில் செல்லக்கூடிய காட்சிகளை வீடியோவாக ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார்.

இந்த வீடியோவின் கேப்ஷனாக ஹேப்பி நியூயர் என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை மகிழ்ச்சியும் நன்றியையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

தொடர்புடைய இணைப்புகள்

Music Director AR Rahman shares New Year Wishes To his Fans

People looking for online information on AR Rahman, Music Director, New year will find this news story useful.