Valimai BWE
www.garudabazaar.com

ஸ்ரீதேவி நினைவுநாளில் வலிமை ரிலீஸ்.. ‘டைட்டில் கார்டை’ பார்த்து நெகிழ்ந்த அஜித் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 24, பிப்ரவரி 2022: தமிழ் முதலான தென்னிந்திய திரைப்படங்களில் 80களில் இருந்தே ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018-ஆம் ஆண்டு துபாயில் மரணம் அடைந்தார். 

ajith valimai release sridevi anniversary title card momeries

நடிகை ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்லீஷ் விங்லீஷ் திரைப்படத்தில் நடிகர் அஜித் சர்ப்ரைஸாக விமான பயண காட்சியில் இடம் பெற்று ஸ்ரீதேவியுடன் சில உரையாடல்களை நிகழ்த்துவார். நடிகர் அஜித், நடிகை ஸ்ரீதேவி படத்தில் நடித்தது குறித்த இந்த காட்சிகள் அஜித் ரசிகர்களிடையே அந்த நேரத்தில் மிகவும் ஆர்வமாக பேசப்பட்டன.

வலிமை திருவிழா

இந்நிலையில் தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. 

படக்குழுவினர்

இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீதேவி நினைவு நாள்..

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வலிமை படத்தின் தொடக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை நினைவுகூர்வதாக,‘நீங்கா நினைவுகளுடன்' என ஸ்ரீதேவியின் புகைப்படத்துடன் டைட்டில் கார்டில் குறிப்பிட்டு வலிமை திரைப்படம் திரையரங்கில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

இதைப் பார்த்து, அஜித் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். அத்துடன் வலிமை திரைப்பட வெளியீட்டு தேதியான பிப்ரவரி 24-ஆம் தேதி என்பது நடிகை ஸ்ரீதேவியின் மறைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அப்டேட் முதல் ரிலீஸ் வரை.. அஜித் நடிக்கும் வலிமை கடந்து வந்த பாதை! மறக்க முடியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

ajith valimai release sridevi anniversary title card momeries

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, AK, Boney kapoor, Ghibran, H Vinoth, Sridevi, Valimai, Valimai Songs, ValimaiFromFeb24, ValimaiFromFeb24th, ValimaiUpdate, Valimi music, ValimiFDFS, Yuvan Shankar Raja will find this news story useful.