www.garudabazaar.com

"எவ்வளவோ திறமை இருந்தும்..".. வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் அட்வைஸ் பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்திய ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Director Selvaraghavan life advice Tweet Goes Viral

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி முக்கிய இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கினார். தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் தமது முதல் மனைவியும், நடிகையுமான சோனியா அகர்வாலுடன் விவாகரத்து செய்து, பின்னர் தமது உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை 2011 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கீதாஞ்சலி செல்வராகவன் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தை இயக்கியவர்.

அந்த படத்துக்கு செல்வராகவன் கதை எழுதியிருந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த பதிவில்,"எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு “கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல“ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்" என எழுதி கீழே அனுபவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக செல்வராகவன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில்,"“தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” என அவர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Director Selvaraghavan life advice Tweet Goes Viral

People looking for online information on Director, Selvaraghavan, Tweet will find this news story useful.