சூர்யாவுடன் மோதும் 'பாகுபலி' பிரபாஸ் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 23, 2019 10:08 AM
லைக்கா புரொடக்ஷன் சார்பில் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்துள்ள படம் 'காப்பான்'. இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் 'சாஹோ' படமும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்க, அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுஜீத் இயக்கியுள்ளார்.