உலக அளவில் பிரபாஸின் சாஹோவுடைய Box office Collection இவ்வளவா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ், ஷரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'சாஹோ'. இந்த படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

Prabhas starrer Saaho's Worldwide Box Office collection is here

இந்த படத்தில் அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், மந்திரா பேடி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சுஜித் எழுதி, இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் வசூல் விவரம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் உலக அளவில் இரண்டு நாட்களில் ரூ. 205 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது படம் சாஹோ. முதலிடத்தில் பாகுபலி உள்ளது. இரண்டும் படங்களும் பிரபாஸூடையது என்பது குறிப்பிடத்தக்கது.