கொரோனா தொடரும் சோகம் : பழம்பெரும் நடிகை பலியானார்... அதிர்ச்சியில் திரையுலகம்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. அவ்வகையில் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் எழுத்தாளரான 'பாட்ரிசியா போஸ்வார்த்' கொரோனா காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86. சமீபத்தில் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வெளிநாட்டு ஊடகங்களின் அடிப்படையில் அவர் கடந்த 2- ம் தேதி மரணமடைந்தார் என்ற செய்தி உறுதியாகியுள்ளது.
Tags : Patricia Bosworth, Corona, Covid19, Actress, Death