அதிரடி குட் நியூஸ்.. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பிரபல இந்திய பாடகி குணமாகினார்...!!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் சமீபத்தில் லண்டன் சென்று திரும்பிய நிலையில் இவருக்கும் நோய் இருப்பது என்று கண்டறியப்பட்டது.
தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப கொரோனா டெஸ்டில் 'நெகட்டிவ்' வர வேண்டும். ஆனால் கடந்த ஐந்து முறை பரிசோதனை செய்த போதும் அவருக்கு 'பாசிடிவ்' என்ற முடிவே வந்திருந்தது.
இந்நிலையில் ஆறாவது முறையாக டெஸ்ட் செய்த போது அவருக்கு கொரோனா குணமாகியிருப்பதின் அறிகுறியாக 'நெகட்டிவ்' என்ற முடிவு வந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.