Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சி!!.. பிரபல 'இரட்டை இயக்குநர்களுள் ஒருவரான' ஜெர்ரியின் தாயார் கொரோனாவால் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உல்லாசம், விசில் உள்ளிட்ட திரைப்படங்களையும் பலதரப்பட்ட பிரம்மாண்ட விளம்பரங்களையும் இயக்கியவர்கள் இரட்டை இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி.

popular twin dual director jerry loss his mother due to covid

இவர்களுள்  இயக்குநர் ஜெர்ரின் தாயாரான 78 வயதான சூசையம்மாள் தற்போது மரணம் அடைந்துள்ள செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது சொந்த, நெருங்கிய உறவுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

popular twin dual director jerry loss his mother due to covid

அந்த வகையில் நேற்றைய தினம் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தான் இயக்குநர் ஜெர்ரியின் தாயார் சூசையம்மாள் கொடைக்கானலில் இன்று காலை மரணம் அடைந்ததாகவும் இவர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜேடி ஜெர்ரி இணைந்து தற்போது சரவணா ஸ்டோர்ஸ் லிஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தினை இயக்கிவருகின்றனர். இந்த படத்தில் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

popular twin dual director jerry loss his mother due to covid

இந்தியாவிலும் தமிழகத்திலும் கொரோனா 2வது அலை பெரும் அச்சுறுத்தலை உண்டு பண்ணிவருகிறது. மாஸ்க் அணிதல், சமூக விலகல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றுடன் கோவிட் தடுப்பூசி ஆகியவை தான் கொரோனாவில் இருந்து நம்மை தற்காக்கும் காரணிகள் என்பதை உணர்ந்து மக்கள் விழிப்புடனும் பாதுகாப்புடனும் வீட்டுக்குள் இருத்தல் அவசியம்!

ALSO READ: தொடரும் இழப்புகள்! தந்தையின் திடீர் மரணம்.. நடிகை சுதா சந்திரன் கண்ணீர் பதிவு..!!

popular twin dual director jerry loss his mother due to covid

People looking for online information on JD Jerry, Jerry, RIPSoosaiyammaal, Soosaiyammal will find this news story useful.