தொடரும் இழப்புகள்! தந்தையின் திடீர் மரணம்.. நடிகை சுதா சந்திரன் கண்ணீர் பதிவு..!!
முகப்பு > சினிமா செய்திகள்திரைத்துறையில் திரைப் பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் என அடுத்தடுத்து பலரும் மரணம் அடைவதை மக்கள் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் பிரபல இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் அருண்ராஜா காமராஜ் தம்முடைய மனைவி சிந்துஜாவை இழந்திருக்கிறார். ஆம், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
அவருடைய இறுதிச் சடங்கினை இன்று அருண்ராஜா காமராஜ் கொரோனா தடுப்பு உடைகளை அணிந்துகொண்டு செய்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் மனைவியும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி இவர்களது தாயாருமான மணிமேகலை காலமானார்.
இந்த நிலையில்தான் பிரபல நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனின் தந்தை கே.டி. சந்திரன் மரணம் அடைந்திருக்கிறார். சின்னத்திரையில் விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்களால் பிரபலமாக அறியப்பட்ட சுதா சந்திரன் தம் தந்தையை தற்போது இழந்து இருக்கிறார். சுதா சந்திரன் தந்தை கே.டி.சந்திரன் பிரபல இந்திப் படங்களில் நடித்த நடிகர் என்பதும் அவருக்கு வயது 86 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுதா சந்திரன், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை குட் பை அப்பா. ... உங்கள் மகள் என்பதில் பெருமிதம் .... நான் உங்கள் கொள்கைகளை, அனுபவத்தை , மதிப்புகளை என் வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை பின்பற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
ஆனால் என் ஒரு பகுதி உங்களுடனே சென்றது அப்பா ... நான் மீண்டும் உங்கள் மகளாக பிறக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ALSO READ: "என் சகோதரா...".. புதுப்பேட்டை, அசுரன் பட நடிகர் மறைவுக்கு தனுஷ் உருக்கமான பதிவு!