பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் குறித்த பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தனது நிறுவனத்தின் புரொமோஷன் விளம்பரங்களுக்கு பெரிய ஹீரோக்களை எதிர்ப்பார்க்காமல் தானே நடித்து அசத்தினார். அவர் நடித்த விளம்பரங்களை கலாய்த்து மீம்ச்கள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும், மக்கள் மனதில் தனக்கென ஓர் இடம்பிடித்தார்.
தமிழ் சினிமாவில் ந்வ்வித சினிமா பின்புலமும் இன்று சாதித்த பல ஹீரோக்களை போல், முன்னணி தொழிலதிபராக வெற்றிபெற்ற லெஜண்ட் சரவணன் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார். லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தை ஜேடி -ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். இப்படம் வரும் 2020ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்.14ம் தேதி கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின், இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் செப்டம்பர்.2ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.