90's கிட்ஸ்களின் Favourite cartoon டாம் அண்ட் ஜெர்ரி'யில் நடிக்கும் இந்திய ஹீரோயின்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 01, 2019 01:52 PM
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி டாம் அண்ட் ஜெர்ரி. கார்டூன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் டாமும் ஜெர்ரியும் சேட்டைகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

இந்நிலையில் டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சி தற்போது திரைப்படமாகவிருக்கிறது. இந்த படத்தை டிம் ஸ்டோரி இயக்கவிருக்கிறார். டாம் அண்ட் ஜெர்ரி டிவி தொடர் போல இந்த படமும் முழுக்க கார்டூன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரன்பீர் கபூரின் பிஷெர்மேன், ஆயூஷ்மான் குர்ரானாவின் ஹவைஸாடா உள்ளிட்ட படங்களில் நடித்த பல்லவி ஷர்தா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
Tags : Pallavi Sharda, Tom And Jerry