Video: "புதுப்பேட்டை Time-ல நிதீஷ் அறிமுகம்.. இளைஞர்கள் பொறுப்பா இருக்கணும்!" - வெற்றிமாறன்!
முகப்பு > சினிமா செய்திகள்திரைத்துறையில் தொடர்ந்து கொரோனாவால் நிகழும் மரண சம்பவங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, ‘கில்லி’ மாறன் மற்றும் பாடகர்கள், சின்னத்திரை நடிகர்கள், இயக்குநர்கள் பலரும் இந்த பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தனர்.
இந்த சோகத்தில் இருந்து திரைத்துறை மீளாத்துயரில் இருந்த நிலையில், வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் இன்று மரணம் அடைந்துள்ளார். இதற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அசுரன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் நிதிஷ் மறைவு குறித்து பேசியுள்ளார். அதில், “நண்பர் நிதிஷ் மருத்துவமனையில் இருந்த தகவலை அறிந்து விசாரித்தபோது 2 நாட்களில் அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கலாம் என டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று காலையில் அவர் இறந்த செய்தி வந்தது. அவரை எனக்கு புதுப்பேட்டை காலகட்டத்தில் இருந்தே தெரியும்.
நான் அப்போது உதவி இயக்குநர். ஒரு நடிகராக அவர் வாழ்வு மேடு பள்ளங்களுடன் இருந்தது. அசுரன் படத்துக்கு பின்னர் அவருக்கு நிறைய படவாய்ப்புகள் இருப்பதாக கூறி சந்தோஷப் பட்டார். இது அவருடைய குடும்பத்தினருக்கும், என்னை போல் அவரை அறிந்த நெருங்கிய நண்பர்களுக்கும் இழப்பு. பலரும் இந்த கொரோனாலாம் இல்லை. ஏமாற்று வேலை. சும்மா, இதன் நோக்கம் இதுதான் என பலவிதமாக சொல்லி கேட்டிருக்கேன். ஆனால் இந்த வருடம் நமக்கு தெரியவில்லை என்றாலும் கூட நமக்கு பிடித்தவர்களை, நெருக்கமானவர்களை கொரோனா தாக்குகிறது.
நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இது. முடிந்தவரை மாஸ்க் அணிவதை கடைபிடித்தால் கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என சொல்கிறார்கள். ஜப்பானில், கொரோனா வைரஸை வைத்து டெஸ்ட் செய்யும்போது மாஸ்க் அணிந்தால் 70 % தொற்றை தடுக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள். மாஸ்கை மூக்குக்கு கீழே இருக்குமாறு என்றெல்லாம் இல்லாமல், சரியாக போட வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை கொரோனா பாசிடிவாக இருந்தால், தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் மிகவும் நம்பும் மருத்துவர்களுடன் ஆலோசிக்கலாம். டாக்டர்கள் ஆக்ஸிஜன் அளவு 95%,94% என குறைவதை ஆக்ஸி மீட்டர் மூலம் அறிந்தால் கூட எச்சரிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். நாம் சரியான நேரத்துக்கு விரைவாக மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர்களின் சிகிச்சை நமக்கு உறுதுணையாக அமையும். மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள சொல்லி வலியுறுத்துகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்று வருகிறது. நுரையீரல் பாதிப்பு பெரிதாக இல்லை என்கிறார்கள்.
எனக்கு வராது, நான் தினமும் ஆரோக்கியமான உடற்பயிற்சி செய்கிறேன், பாதிக்காது என்றெல்லாம் சொல்ல கூடாதென நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியே வரும் இளைஞர்கள் உடல் வலிமையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருக்கிறார்கள். ஆக இளைஞர்களுக்கு பொறுப்பு இருப்பதாக பாருங்கள். மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களை விட உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தார்க்கும் முக்கியம்.! பொறுப்புடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை ஜெயிக்க முடியும். பாதுகாப்பாக இருங்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.
VIDEO: "புதுப்பேட்டை TIME-ல நிதீஷ் அறிமுகம்.. இளைஞர்கள் பொறுப்பா இருக்கணும்!" - வெற்றிமாறன்! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Nitish Veera's Viral Throwback Video Makes Fans Emotional - Shares Memories Of Asuran, Dhanush And Pudhupettai
- Asuran Actor Nitish Veera Passes Away Due To Covid அசுரன் நடிகர்
- Tamil Actor Nitish Veera Of Asuran, Pudhupettai, Kaala Fame Passes Away - Details
- Vijay Sethupathi Vetrimaaran And Activists Request To MK Stalin
- Asuran Actress Tests Positive For Covid 19, Here's What The Doctor Advised Her Ft Ammu Abhirami
- Asuran Telugu Remake Narappa Team Makes Important Announcement
- Vetrimaaran Viduthalai Soori Vijay Sethupathi Sensational FL
- Suriya Vaadivaasal Vetrimaaran GV Prakash Kumar சூர்யா
- Asuran Telugu Remake Narappa Family Pic From This Lovely Scene - See Here
- Asuran Remake Narappa Venkatesh New Poster Ugadi
- Vetrimaaran Soori Project Second Schedule Is Completed
- Dhanush’s Asuran And Karnan Producer Kalaipuli S Thanu’s Exclusive Interview
தொடர்புடைய இணைப்புகள்
- விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர்.. முதல்வராகும் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்!
- Kaaka Muttai Brothers இப்போ எப்படி இருக்காங்கனு தெரியுமா?, இந்த Video பாருங்க | Vignesh, Ramesh
- வீடு கட்டுவதற்காக பெற்ற மகளையே விற்ற தாய்! - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- 🔴 Ken: Dhanush Sir அப்போவே இத கேட்டாரு... | Vetrimaaran, Asuran
- Dhanush From Hollywood Live: என்ன சொல்றதுன்னு தெரியல, ரொம்ப.... - Dhanush On Asuran, National Award
- Dhanush, Vijay Sethupathi, Parthiban, Imman என National Awards-ல் அசுர வேட்டை |Super Deluxe,Viswasam
- OFFICIAL VIDEO: Vignesh Shivan's Paava Kadhaigal Making! | Love Panna Uttranum | Anjali
- Paava Kadhaigal-ல என்னோட இந்த Scene-லாம் Remove பண்ணிட்டாங்க! - Actor Hari Breaks!
- Vetri Maaran Sir படத்துல Bad Words பேச முடியாம.. - Actress Anju Breaks Untold Stories!
- Kavalthurai Ungal Nanban படமும், Visaaranai படமும் ஒன்னா? - Vetri Maaran Exclusive Interview
- Dhanush எனக்காக ஓடி வந்து Sign பண்ணாரு -Dr.Karthika-Karthik Reveals Unknown Family Stories |Part 2
- Dhanush Sir ரொம்ப Ragging பண்ணாரு.,கல்யாணத்துல அவர் பண்ண சேட்டைகள்🤣- Karthick-Karthika 1st Interview