90-ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலமான சின்னத்திரை நடிகர் காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாகவே திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி சார்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்து வரும் வேளையில் அடுத்த சோக செய்தி மக்களை தாக்கியுள்ளது. 90-ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலமான 'கிரைம் பாட்ரோல்' தொடரின் நடிகர், ஷபிக் அன்சாரி தற்போது மரணம் அடைந்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகர் மரணம் அடைந்தார் கேன்சரால் வந்த சோகம் popular tv artist dies due to cancer at the age of 52

மூளை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52.  நடிகராக மட்டும் இல்லாமல் எழுத்தாளராகவும், துணை இயக்குனராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். இவரது இறப்பு செய்தியை CINTAA (Cine & TV Artistes' Association) என்ற திரைத்துறை சங்கம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor