பிரபல இளம் தமிழ் சீரியல் நடிகைக்கு விரைவில் ‘டும் டும் டும்’.. செம்ம வைரல் ஆன ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் சீரியல் நடிகை, தனது காதலரை திருமணம் செய்து கொள்ளத் தயாராக உள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அந்த இளம் சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார்.

popular tamil young serial actress marriage soon viral pic

பிரபல சீரியல் நடிகை வைஷாலி தணிகா, விஜய் டிவி, சன் டிவியில், ஜீ தமிழ் என பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடித்தும் வருகிறார்.

குறிப்பாக ஜீ தமிழின் ‘கோகுலத்தில் சீதை’ உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷாலி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமது சமூக வலைதளத்தில், மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார்.

popular tamil young serial actress marriage soon viral pic

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆம், நடிகை வைஷாலி தணிகா, தனது காதலர் சத்யா தேவ் என்பவருடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான தகவலை அவர் ஏற்கனவே பல முறை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளர்.

இந்நிலையில் தனது வருங்கால கணவருடனான ஒரு அதிகாரப்பூர்வ ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார் நடிகை வைஷாலி.

popular tamil young serial actress marriage soon viral pic

அதாவது நடிகை வைஷாலி, தங்கள் திருமணத்திற்காக தமது வருங்கால கணவருடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, நடிகை வைஷாலி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இவர்களின் திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் இவர்களுக்கு டும் டும் டும் நடக்கலாம் என எதிர்பார்க்கலாம்.

Also Read: "வாழ்க்கைல எடுத்த தப்பான முடிவு?.. "இந்த சீரியல் தான்"..  'பாரதி கண்ணம்மா' வெண்பா பரபரப்பு பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

popular tamil young serial actress marriage soon viral pic

People looking for online information on Gokulathilseethai, SerialActress, SunTV, TVActress, Tvserialactress, Vijaytv, ZeeTamil will find this news story useful.