கொரோனா : மருத்துவமனையில் இருந்த பிரபல பாடகர் காலமானார்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பல பிரபலங்களுக்கும் பரவி வருகிறது.

அதே போல் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் பாடகர் 'ஆதம் ஷெலெஸிங்கர்' கொரோனா காரணமாக மருத்துவமனையில் இருந்தார். தனது வெற்றி பாடல்கள் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு இவர் சொந்தக்காரர். அவரது நிலைமை மிகவும் மோசமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் அவரது குடும்பத்தினர் நேற்று(01.04.2020) "எங்கள் மகன் கோமாவில் இல்லை. அவர் சிறந்த முறையில் கவனித்துக் கொள்ளப் படுகிறார். எங்கள் மகனைப் பற்றி விசாரிக்கும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். தற்போது அவர் ventilator மூலம் சுவாசம் பெறுகிறார். சீக்கிரமே அவர் குணமாகி வருவார் என்று முழு நிச்சயமாக நம்புகிறோம்" என்று கூறி இருந்த நிலையில், இன்று அவர் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியானார் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது