கொரோனா தொடரும் சோகம் : பிரபல பாடகர் மரணம் அடைந்தார்... ஆழ்ந்த துக்கத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பல பிரபலங்களுக்கும் இந்நோய் பரவி வருகிறது. அவ்வகையில் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பிரின் கொரோனாவால் காலமானார். அவருக்கு வயது 73. அவர் மார்ச் 17 அன்று அவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டதாக அவரது மனைவி அறிவித்தார். இந்நிலையில் அவரது இறப்பு செய்தி அவரது ரசிகர்களை செங்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் இரண்டு முறை கிராமி விருது பெற்று ஹால் ஆப் பேம்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.