பிரபல தயாரிப்பாளரின் இரு மகள்களுக்கும் கொரோனா.. அறிகுறிகளே இல்லாமல் பரவிய நோய்...!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தயாரிப்பாளரின் இரு மகள்களுக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஹாப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவரின் மூத்த மகளான ஷாசா சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஸ்ரீலங்கா சென்று வந்துள்ளார். இதுவரை அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் அவரின் இரண்டாவது மகளுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுவரை மூத்த மகளுக்கு அறிகுறிகள் இல்லாத இருந்தது எப்படி? என்று மருத்துவர்கள் குழம்பி வருகின்றனர். அதே போல் லண்டன் சென்று திரும்பி வந்த பிரபல பாடகி கணிக கபூர் கொரோனா நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 முறைகள் பரிசோதித்தபோது பாசிட்டிவ் என்று வந்த நிலையில், ஆறாவது முறையில் அவருக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இதனையடுத்து அவர் நோயிலிருந்து விடுபட்டதாக நல்ல செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.