Video: இதுக்கு முன்னாடி 'டைட்டில்' ஜெயிச்சவங்கலாம்... என்ன 'இப்படி' சொல்லிட்டாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆரி, ஆஜீத், பாலாஜி, ரியோ, சோம், கேப்ரியலா, ஷிவானி, ரம்யா ஆகிய 8 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் 5 பேர் இடம்பெற்று இருக்கின்றனர். இதனால் போட்டி மேலும் கடுமையாக மாறியுள்ளது. குறிப்பாக டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

'If i am won the title' Balaji's conversation goes viral

தற்போது ஆரி, பாலாஜி இருவருக்கும் இடையில் கடும்போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாலாஜி கடந்த சீசன் பிக்பாஸ் டைட்டில் வின்னர்களை கிண்டலடித்து தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பாலாஜி, ஆஜீத்திடம், நான் டைட்டில் வின் பண்ணா அது ட்ரெண்ட் செட்டரா இருக்கும். இதுக்கு முன்னாடி ஜெயிச்சவங்கள பார்த்தேனா உட்கார்ந்து கடலை தான் சாப்டுட்டு இருந்தாங்க என கூறினார்.

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்று இருக்கின்றனர். இந்த நிலையில் பாலாஜி அவர்கள் குறித்து இவ்வாறு கமெண்ட் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

'If i am won the title' Balaji's conversation goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.