"எனக்கு கொரோனாவா?" - விஷமிகள் செய்த செயல்....பிரபல தேசிய விருது வாங்கிய நடிகை வேதனை...!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோயின் தாக்குதலைக் குறைக்கும் வண்ணம் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நோய் பல பிரபலங்களுக்கும் பரவி வருகிறது. அந்த வகையில் தேசிய விருது வாங்கிய பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா-வுக்கும் கொரோனா நோய் பரவியதாக செய்திகள் உலா வந்தன. இவர் The Race Against Time, Dil Dhadakne Do போன்ற பல படங்களில், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்த செய்தியினால் அவரது ரசிகர்களும், உறவினர்களும் பயம் அடைந்தனர். அவருக்கு பலரும் போன் மெசேஜ் மூலம் விசாரிக்க தொடங்கினர். இதனையடுத்து இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் பொருட்டு அவர் தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதாவது தனது முகநூல் பக்கம் சிலரால் ஹாக் செய்யப்பட்டுள்ளதாகவும். தனக்கு கொரோனா இலையென்றும், இருந்தாலும் தன்னை மக்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.