அப்பாவான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரபலம்... வெளியான மகிழ்ச்சி செய்தி... என்ன குழந்தை..?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கே.எம்.பாஸ்கரன். கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பயப்படும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் போதிலும், சில நல்ல செய்திகளும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் கே.எம்.பாஸ்கரன் ஒரு குழந்தைக்கு அப்பாவாகி இருக்கிறார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் முதல் படமான தேசிய விருது வாங்கிய 'வல்லினம்' படத்தில் ஆரம்பித்து, 10 எண்றதுக்குள்ள, குற்றம் 23 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிலும் முக்கியமாக சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. படத்தை பார்த்த பலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்று தேடும் அளவிற்கு அவரது உழைப்பு இருந்தது.
துல்கர் சல்மான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் போன்றவர்கள் நடித்த அந்த படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் குழந்தை பற்றிய மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு அவர் "எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவர் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆண்குழந்தை. கடவுளுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.