நடிகை குஷ்பூவின் நிஜமான 'சின்ன தம்பி' சகோதரர்களை பார்த்து இருக்கீங்களா? - வைரலாகும் போட்டோ..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் 365 நாட்கள் ஓடி சக்கை போடு போட்ட படம் சின்னத்தம்பி. நடிகர் பிரபு, குஷ்பூ சேர்ந்து நடித்த இந்தப் படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்த இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.

இந்த படத்தின் கதை சற்று வித்தியாசமானது கிராமத்தில் வளரும் சின்னதம்பி நடிகர் பிரபுவுக்கும், பெரிய வீட்டுப் பெண் குஷ்புவுக்கும் காதல் வளரும். குஷ்பூவுக்கு 3 செல்வாக்கு மிகுந்த அண்ணன்கள் இருப்பார்கள். குஷ்பூ அந்த படத்தில் எப்படி அவ்வளவு எதார்த்தமாக நடித்தார் என்று யோசித்தால், அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
நடிகை குஷ்பூவுக்கு நிஜத்திலும் மூன்று அண்ணன்மார்கள் இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் சகோதரர்களுடன் எடுத்த இளம் வயது போட்டோவை வெளியிட்டுள்ளார். டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவர்களுடன் செல்ல தங்கையா குஷ்பூ காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.