Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

கனி அக்கா வீட்டிற்கு சப்ரைஸ் விசிட் அடித்துள்ள பிரபல ஹீரோ... என்ன விஷயம் தெரியுமா...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆரம்பம் முதலே தனது சிறப்பான பங்களிப்பு மூலம் கவனம் பெற்று இருப்பவர் கனி. இவர் யார் என்பது பலரும் தெரியாத விஷயமாக இருக்கலாம். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான 'சொல் விளையாட்டு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், பிக்பாஸ் சீசன் 2வில்  பங்கேற்ற நடிகை விஜய லட்சுமியின் சகோதரி மற்றும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் குக் வித் கோமாளி  சீசன்2 முடிந்துள்ள நிலையில் கனி முதலிடத்தை தட்டி சென்றுள்ளார்.

popular hero makes surprise visit to kani home கனி வீட்டிற்கு பிரபல ஹீரோ சப்ரைஸ் விசிட்

குக் வித் கோமாளி சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 4 மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் கனி பலவகையான உணவுகள் தயார் செய்தாலும், காரக்குழம்பு செய்வதில் மிகவும் வல்லவர். இதனால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது சிம்பு கூட ஒரு நாள் எனக்கு கார குழம்பு செய்து கொடுங்கள் கனி என்று அன்புடன் கேட்டிருந்தார். இந்நிலையில் இதனை உண்மையாக்கும் பொருட்டு கனியின் வீட்டிற்கு நடிகர் சிம்பு மற்றும் அவர்கள் குழுவினர் அதிரடியாக சப்ரைஸ் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு கனி தனது குடும்பத்தினருடன் கார குழம்பு மற்றும் பலவகையான உணவுகளை செய்து அன்புடன் உபசரித்துள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி அவர் கீழ்காணும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

popular hero makes surprise visit to kani home கனி வீட்டிற்கு பிரபல ஹீரோ சப்ரைஸ் விசிட்

கனி அக்கா வீட்டிற்கு சப்ரைஸ் விசிட் அடித்துள்ள பிரபல ஹீரோ... என்ன விஷயம் தெரியுமா...! வீடியோ

Tags : Kani, Simbu

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular hero makes surprise visit to kani home கனி வீட்டிற்கு பிரபல ஹீரோ சப்ரைஸ் விசிட்

People looking for online information on Kani, Simbu will find this news story useful.