Reliable Software
www.garudabazaar.com

'மனுஷன் இவ்ளோ சிம்பிளா?'.. சிம்புவின் மாநாடு.. இயக்குநர் பகிர்ந்த Viral புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியானதுமே ரசிகர்கள் குஷி ஆகி விட்டனர்.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து இருந்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் சமயத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு திரைப்படம் வெளியானதை அடுத்து உற்சாகமடைந்தனர்.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

இதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸியானது அவருடைய ரசிகர்களுக்கு இன்னும் உற்சாகத்தை ஊட்டியது. இந்த நிலையில் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்து வருவதாக வெங்கட் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தம் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

இதனிடைடே படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வைரலான ஸ்டில்கள் எல்லாம் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக இந்த படப்பிடிப்பு தளத்தில் சிம்பு இந்த படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் அடங்கிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தன.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

இதனிடையே இதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவுடன் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுவது உள்ளிட்ட புகைப்படங்களும், இந்த படத்தில் நடித்து வரும் முக்கியமான நடிகர் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் கெட்டப்பில் நின்று கொண்டு சுரேஷ் காமாட்சியுடன் பேசிக் கொண்டிருந்த புகைப்படங்களும் வைரலாகி வந்தன.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

இந்நிலையில் மாநாடு திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் இரவு நேரத்தில் ஷூட் நடக்கும் அந்த மைதானத்திலேயே மக்களோடு மக்களாக அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மிகவும் சிம்பு படுத்து உறங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

இந்த புகைப்படத்தை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பிளான மனிதர் என  இயக்குனர் ட்வீட் செய்திருக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் சிம்பு தரையில் படுத்து இருக்கும்போது எஸ்.ஜே.சூர்யா நின்றபடியே அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

அதற்கு சிம்புவும் சிரித்துக் கொண்டே பதில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Man of simplicity Venkat Prabhu shares Simbu Viral pic Maanaadu

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Simbu, Sj suryah, Trending, Venkat Prabhu, Viral will find this news story useful.