Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளியை தொடர்ந்து Mr & Mrs சின்னத்திரையில் நுழைந்த பாப்புலர் பிரபலம்.. வெளியான Promo !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

Popular CWC contestant in Mr &Mrs chinathirai Mr & Mrs சின்னத்திரையில் நுழைந்த பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலே காதலே' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த செய்தி மிகவும் வைரலானது. அதன் பிறகு சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்பு ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணைந்த மகாசங்கமத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அர்ச்சனா விஜய் டிவியில் முழுநேர தொகுப்பாளராக பிரம்மாண்ட நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளியில் பங்கேற்ற நடிகை தீபா தனது கணவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இந்த ப்ரோமோவை தற்பொழுது விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது யதார்த்தமான நகைச்சுவைகளால் ரசிகர்களை கவர்ந்த தீபா, இந்த நிகழ்ச்சியிலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குக் வித் கோமாளியை தொடர்ந்து MR & MRS சின்னத்திரையில் நுழைந்த பாப்புலர் பிரபலம்.. வெளியான PROMO ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popular CWC contestant in Mr &Mrs chinathirai Mr & Mrs சின்னத்திரையில் நுழைந்த பிரபலம்

People looking for online information on Cooku with comali, Deepa will find this news story useful.