நடிகர் விவேக் திடீர் மறைவு... சிம்பு வெளியிட்ட அறிக்கை... "அவருக்கு நான் செய்ய போவது இதுதான்"..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அவரது இழப்பு காரணமாக நடிகர், நடிகைகளும், பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டை அடைந்துள்ளனர்.
தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புகழ்பெற்ற நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு உரிய மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்குடன்அன்பு அண்ணன். நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்க கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயரச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.
பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை. தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்த மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார். அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை. நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது 'இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியை செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- RIP Vivekh STR Releases Emotional Statement Read Here
- Boys Film Actor Pays Homage To Vivek பாய்ஸ் பட நடிகர் நெகிழ்ச்சி செயல்
- Vivekh Last Speech Covid Vaccination Awareness Press Meet Video
- Vivekh Tree Planting Spree Despite Teenage Son Loss
- Robo Shankar Pays Last Homage To Vivek விவேக்கின் உடலை பார்த்து கதறி பிரபலம்
- Vivekh Heartmelt Letter After He Lost His 7 Yrs Old Son
- Vivekh Last Press Interaction Full Of Concern For Public
- Vivek Conversation With Vadivelu Heartfelt Throwback Video
- Vivek First Jobs Is This Before Cinema சினிமா துறைக்கு வரும் முன்பு விவேக்
- நடிகர் விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகை திரிஷா | Actress Trisha Pays Last Respects To Late Actor Vivekh RIP Vivek
- Vivek Old Viral Speech Darbar Audio Launch Rajinikanth
- Vijay Tv Pugazh Pays Last Respect Actor Vivekh Emotional Post
தொடர்புடைய இணைப்புகள்
- Vivek -க்காக கண்ணீர் வரவைக்கும் மரணகானா : Gana Song For Vivek | RIP Vivek
- "Election முடிஞ்ச அப்புறம் தான் கரோனா பரவுதா?" அமீர் எழுப்பும் சந்தேகங்கள் | Latest பேட்டி | Vivek
- Vivek -ஐ காப்பாற்றுவதில் என்ன சிக்கல்? Silent Heart Attack-ன் பின்னணி உடைக்கும் Doctor பேட்டி
- "தமிழ் திரை உலகத்துக்கு மிகப்பெரிய பேரிழப்பு" - லிங்குசாமி, அர்ஜுன் நேரில் அஞ்சலி
- சிரிப்பு செத்துவிட்டது.. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது.. அதனால்தான் சிரிப்பை திருடிவிட்டாய்!
- "யாரை பற்றியும் தவறாக பேசாதவர்" - கண்கலங்கிய நடிகர் கார்த்திக்
- நடிகர் விவேக்-ன் இறுதி பயண காட்சிகள்! - RIP VIVEK
- 72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு! | RIP VIVEK
- நெஞ்சு வலி வந்தா உடனே என்ன செய்யணும்? காப்பாற்றுவது எப்படி? Expert Doctor Live Demo
- 14
- 14 | RIP Vivek: 40 Rare and Unseen pics of the legend to put your heart at ease! - Slideshow
- 14 | Empty Chennai streets during Janata Curfew - Exclusive Photos of the shutdown! Don't Miss! - Slideshow