Reliable Software
www.garudabazaar.com

Video: சிவாங்கி கவுண்ட்டரில் தெறித்து ஓடிய சிம்பு!.. கனியை கலாய்த்த ரஹ்மான்.. Viral Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்துள்ளன.

Cook With comali Season2 Grand Finale AR Rahman Simbu

சீரியல்கள் மட்டுமே சின்னத்திரையின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த சமயம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக தொடங்கிய நாள் முதலே பிரபலமான சேனல் விஜய் டிவி. பாட்டுக்காக சூப்பர் சிங்கர் தொடங்கிம், நடனம், காமெடி என அனைத்துக்குமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்த விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முன்னணி சேனலாக மாறியது.

Cook With comali Season2 Grand Finale AR Rahman Simbu

அந்த வகையில் புதுமையான நிகழ்ச்சிகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை விஜய் டிவி கொண்டு வந்தது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு குவிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க 4 சீசன்கள் முடிந்துவிட்டன. இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் நிகழ்ச்சி பெரும் வரவேற்பு உண்டானது.

Cook With comali Season2 Grand Finale AR Rahman Simbu

ஒரு சமையல் நிகழ்ச்சி இத்தனை மக்களை சென்றடைந்து பிரபலமாகி இருக்கிறது என்பது தமிழ் சின்னத்திரை சூழலில் ஆச்சரியமாக கருதப்பட்டது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கியது. இந்த இரண்டாவது சீசனில் மூலம் புகழ், சிவாங்கி அஷ்வின், சுனிதா, கனி, பாலா, ஷகிலா, ரித்திகா மற்றும் பலர் புகழ் பெற்றனர். செஃப் தாமோதரன் மற்றும் வெங்கடேஷ் பாத் இருவரும் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒளிபரப்பாகிறது.

Cook With comali Season2 Grand Finale AR Rahman Simbu

இந்த நிகழ்வுக்கு சிம்பு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அப்போது சிம்புவிடம் மொக்கை போடும் சிவாங்கி சிம் மேல் பூ வைத்தால் சிம்பு என்று கவுண்டர் போட சிம்பு தெறித்து ஓடுகிறார். இதேபோல் இணையவழியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் கனியை பார்த்து, “என்ன கனி ஃபைனல்ஸ்லயும் காரக்குழம்பு தானா?” என்று கலாய்க்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி எல்லாம் பேசுவாரா? என்பது பல ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புரோமோ இப்போது வைரலாகி வருகிறது.

ALSO READ: "நானும் அத தான் சொல்றேன்.. கம்பேர் பண்ணாதீங்க" - பாக்கியலட்சுமி நேஹா.. என்ன நடந்தது?

தொடர்புடைய இணைப்புகள்

Cook With comali Season2 Grand Finale AR Rahman Simbu

People looking for online information on 99 songs, AR Rahman, CookWithComali2, CookWithComaliGrandFinale, Silambarasan TR, Trending, VijayTelevision will find this news story useful.