ஒயின் ஷாப் முன்பு குவிந்த பெண்கள் - பிரபல இயக்குநர் சொன்ன கமெண்ட் சர்ச்சை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் மே 3க்கு பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வணிக செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியவாசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கும் நேரம் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுக்கடைகள் முன்பு ஆண்கள், பெண்கள் பாகுபாடில்லாமல் வரிசையில் நின்று மதுவாங்கி சென்றனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் இந்த காட்சியை புகைப்படமாக பகிர்ந்து, ''பாருங்க யாரு ஒயின் ஷாப் லைன்ல நிற்கிறாங்கனு. குடிகாரர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க நிறைய செய்யப்பட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

Entertainment sub editor