ஆளும் கட்சியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழ் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்று கமல்ஹாசன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது.

Kamal Hassan tweet regarding MNM success on TASMAC issue

நேற்று முதல் மக்களின் துயரங்களை  மதிக்காமல், டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து விட்டது.  இதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இன்று சிறப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.  அந்த வழக்கு இன்று மதியம் வீடியோ விசாரணைக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அடங்கிய சிறப்பு அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு சார்பில் உதவி அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டே வழக்காட வந்திருந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் மூத்த வழக்கறிஞர் A.R.L. சுந்தரேசன் அவர்கள் ஆஜராகி இருந்தார். அது ஒரு அதிர்வலையை உண்டு பண்ணியது. பிற வழக்கறிஞர்கள் அட்வொகேட் ஜெனரல் உட்பட சட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை கேட்பது ARL சுந்தரேசன் அவர்களிடம் தான். அவரே மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டதற்கு சம்மதித்து மக்கள் நலம் சார்ந்த இந்த வழக்கில் ஆஜரானது அரசு தரப்புக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

மக்கள் நலனுக்காக, எதிர்க் கட்சிகள் செய்ய வேண்டிய  செயல்பாடுகளை  முன்னெடுத்து, தமிழக மக்களின் குறிப்பாக தமிழக பெண்களின் மனசாட்சியாக மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது.எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி . வெல்லும் தமிழகம் என்று அவர் கூறியுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1258759229818564609?s=20

Entertainment sub editor