பிரபல காமெடியன் மதுரை முத்து வீட்டில் சோகம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவி காமெடியன்களின் மிக முக்கியமானவர் என்றால் 'மதுரை' முத்து தான். ரியாலிட்டி ஷோக்களில் ஆரம்பித்து இன்று பட்டிமன்ற நடுவர் என தனது பயணத்தை சாதனைப் பயணமாக மாற்றியுள்ளார். சின்ன கவிஞர், நகைச்சுவை சக்கரவர்த்தி உட்பட 25 விருதுகள் பெற்றுள்ளார். அவரது ஜோக்குகள் மக்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தது. ஆனால் அவரது வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை.

மதுரை முத்து ஒரு நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்த போது அவரது முதல் மனைவி கார் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த துக்க செய்தியில் இருந்து அவர் மீண்டு வரவே பல வருடங்கள் எடுத்தது. இதை அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். அதன் பிறகு குழந்தைகளுக்காக மறுமணம் செய்து கொண்டார்
இந்நிலையில் அடுத்த துக்க செய்தி அவர் தலையில் இடியாய் விழுந்துள்ளது.அவரது தந்தையார் ராமசாமி இன்று மரணமடைந்துள்ளார். கொரோனா நேரத்தில் இந்த செய்தி அவரை மிகவும் உடைத்துள்ளது. விஷயமறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு போன் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.