கொரோனா வைரஸின் தாக்கம் ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்க, திரையுலக பிரபலங்களின் மறைவு செய்திகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை மேலும் துயரம் அடையச் செய்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '4ஜி' திரைப்பட இயக்குநர் ஏவி அருண் பிரசாத் என்கிற வெங்கட் பக்கர் கோயம்புத்தூரில் இன்று (15-05-2020) காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்த செய்தி வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்...அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்...
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..
நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் @AVArunPrasath 😭 pic.twitter.com/wQvtoYOTTF
— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2020