CORONA : பிரபல ஒளிப்பதிவாளர் பரிதாபமாக பலியானார் - பல சாதனைகளை செய்தவருக்கு இதுவா முடிவு...?
முகப்பு > சினிமா செய்திகள்உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான Allen Daviau முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 5 முறை ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர். E.T, The Color Purple, Empire of the Sun போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு வயது 77. இந்நிலையில் அவர் கொரோனாவால் மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர். பல சாதனைகளை செய்த ஒரு கலைஞனுக்கு இயற்கை தரும் நியதி இதுதானா?