கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலிருந்து மக்களை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் தங்கள் இயன்ற தொகையை நிவாரண நிதியாக அளிக்கும் படி அரசு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து இந்திய அளவில் திரைப்பட பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதுகுறித்து செய்திகள் அடிக்கடி வெளியாகி வைரலாகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சன் டிவி ரூ.10 கோடியை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளதாக ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து சன் டிவியின் செயலை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sun TV Group is donating Rs.10 Crores towards Corona Covid 19 relief measures.
சன் டி.வி. குழுமம் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ. 10 கோடி வழங்குகிறது.#COVID19 #CoronaUpdate
— Sun TV (@SunTV) April 9, 2020