"எங்களுக்கு பணம் ஒன்றும் வானத்தில் இருந்து விழவில்லை" - நடிகை மஞ்சிமா மோகன் சரியான பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் தன்னை விமர்சித்த நபருக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை Popular Actress Slams A Person For Making Inappropriate Comment On Her

இதனை தொடர்ந்து அச்சமில்லை அச்சமில்லை, தேவராட்டம் போன்ற படங்களில் நடித்த நடிகை மஞ்சிமா மோகன் ஒரு பதிவிட்டிருந்தார். மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த ஒருவர் மோசமான முறையில் கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மஞ்சிமா "பொதுவாக இப்படிபட்ட மனிதர்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு எனக்கு கிடைத்தது இதுதான். வீட்டில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனை இல்லை என்று நினைப்பது தவறு. எங்களுக்கு பணம் ஒன்றும் வானத்தில் இருந்து விழவில்லை" என்று கூறியிருந்தார.

Entertainment sub editor