'உன்னை Unfriend பண்ண போறேன்'... ரம்யா கிருஷ்ணன் மீது குஷ்பூ பொறாமை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரம்யா கிருஷ்ணன் பதிவிட்ட புகைப்படத்துக்கு குஷ்பூ கிண்டலாக கமன்ட் அடித்துள்ளார்.

kushboo posts a funny comment on insta for ramya krishnan's pic

தமிழ்சினிமாவின் 80-களில் கதாநாயகிகளாக கலக்கியவர்கள் குஷ்பூவும் ரம்யா கிருஷ்ணனும். இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். இப்போது இருவருமே அவரவர்க்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். குஷ்பூ ரஜியின் அடுத்தப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதே போல ரம்யா கிருஷ்ணனும் அந்தாதுன் ரீமேக் என பல படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜி.வெங்கட்ராம் நடத்திய போட்டோஷூட்டில் இருந்து ஒரு புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு குஷ்பு, ' இனி உன்னை என் தோழியாக வைத்துக்கொள்ள வேண்டாம் என தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறேன். நீ ரொம்ப அழகா இருக்க, அதை கண்டு நான் பொறாமை படுகிறேன். இப்ப என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor