ஹிப்ஹாப் ஆதி - "சுந்தர்.சிக்கு தம்பி... எனக்கு சக்களத்தி" ! குஷ்பூ சொல்லும் மிட்நைட் சீக்ரட்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நான் சிரித்தால் சக்சஸ் மீட்டில் ஹிப்ஹாப் ஆதியை பற்றி நடிகை குஷ்பூ குறும்பாக பேசியுள்ளார்.

நான்சிரித்தால் ஆதி குறித்து மனம் திறக்கும் குஷ்பூ | Kushboo opens about Naan Sirithal Aadhi and Sundar.C

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் இராணா இயக்கினார். ஐஷ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்க, கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, முனிஸ்காந்த், படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சுந்தர்.சியின் அவ்னி மூவில் தயாரித்த இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் நான் சிரித்தால் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் நடிகையும் சுந்தர்.சியின் மனைவியுமான குஷ்பூ கூறியதாவது, 'நானும் சுந்தர்.சியும் சினிமாவை மட்டுமே வெகுவாக நேசிக்கிறோம்.  எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. அதனால் தான் அவ்னி மூவிஸ் ஆரம்பித்து படங்கள் தயாரித்து வருகிறோம். ஹிப்ஹாப் ஆதியை என் மகள்தான் அறிமுகப்படுத்தினாள். அதிலிருந்து ஆதி எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார். ஆதியும் சுந்தர்.சியும் பேச ஆரம்பித்துவிட்டால் நேரம் போவது தெரியாது. நைட் தூங்கி எழுந்து பார்த்தால், இருவரும் கதை பேசி கொண்டு இருப்பார்கள். ஆதி சுந்தர்.சிக்கு தம்பி என்றால், எனக்கு ஒரு சக்களத்தி. இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். இது எல்லாத்துக்கும் சுந்தர்.சி மட்டுமே காரணம். நான் முன்னோக்கி செல்கிறேன் என்றால், அதற்கு காரணம் அவர் என் பின்னால் இருப்பது தான்' என அவர் தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி - "சுந்தர்.சிக்கு தம்பி... எனக்கு சக்களத்தி" ! குஷ்பூ சொல்லும் மிட்நைட் சீக்ரட்ஸ். வீடியோ

Entertainment sub editor