www.garudabazaar.com

நயன் & VJS-ன் 'நானும் ரவுடி தான்'.. VJS ROLE-ல் நடிச்சிருக்க வேண்டிய சிவா.. நடிக்காதது ஏன்?..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவா.

Mirchi Shiva About Reasons for Missing Naanum Rowdy Dhaan Movie

Also Read | "விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதலுக்கு நானும் ஒரு காரணம்".. எப்படி? மிர்ச்சி சிவா ஜாலி EXCLUSIVE!

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

அகில உலக சூப்பர்ஸ்டார் என  ரசிகர்களால் அன்போடு குறிப்பிடும், இவரது நடிப்பில் அடுத்ததாக "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சூழலில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், லார்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது.

Mirchi Shiva About Reasons for Missing Naanum Rowdy Dhaan Movie

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், நாளை பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நானும் ரவுடி தான்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நானும் ரவுடி தான்' திரைப்படம்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக  நடித்திருந்தார். நயன்தாரா, செவித்திறன் குறைபாடுடைய பெண்ணாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடித்திருந்தார். பார்த்திபன் வில்லனாகவும், ஆர் ஜே பாலாஜி காமெடி ரோலிலும் நடித்தனர். அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

Mirchi Shiva About Reasons for Missing Naanum Rowdy Dhaan Movie

இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை சிவா & மேகா ஆகாஷ் அளித்துள்ளனர்.

பேட்டியில் பேசிய நடிகர் சிவா, நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்தும் பேசினார்.

Mirchi Shiva About Reasons for Missing Naanum Rowdy Dhaan Movie

எப்போதாவது இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என யோசித்ததுண்டா? என்ற கேள்விக்கு சிவா, "நானும் ரவுடி தான் படம் பண்ண வேண்டியது. எனக்கு சில கொள்கைகள் உண்டு. சில விஷயங்கள் நான் பண்ண மாட்டேன். அது மாதிரி, அது சில சமயங்களில் சின்ன விஷயமாக கூட இருக்கலாம். எனக்கு பெரிய குடும்பம் உண்டு. 5 சகோதரிகள் உண்டு. நிறைய குழந்தைகள் உண்டு. அதனால் தான் அந்த படம் நான் பண்ணல" என சிவா  பதில் அளித்தார்.

Also Read | "போன டிசம்பர்ல தான் அப்பா கூட பேசுனேன்.. சண்டை போட்டு".. மயில்சாமி குறித்து உருகும் யுவன்!

நயன் & VJS-ன் 'நானும் ரவுடி தான்'.. VJS ROLE-ல் நடிச்சிருக்க வேண்டிய சிவா.. நடிக்காதது ஏன்?.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mirchi Shiva About Reasons for Missing Naanum Rowdy Dhaan Movie

People looking for online information on Mirchi Shiva, Naanum Rowdy Dhaan will find this news story useful.