பிரபல திரைப்பட தயாரிப்பாளர்.. கொரோனா வைரஸால் உயிரிழந்த சோகம்.! திரைத்துறையினர் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடித்த பாலிவுட் படத்தின் தயாரிப்பாளர் கொரோனா வைரஸால் மறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவால் காலமானார் | kamal hassan film producer passed away due to covid-19

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 50 ஆண்டுகளை கடந்த நடித்து வருபவர் கமல்ஹாசன். இவர் ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். 1984-ல் இவர் ஹிந்தியில் நடித்த திரைப்படம் ராஜ் திலக். ராஜ்குமார் கோலி இயக்கிய இத்திரைப்படத்தில் தர்மேந்திரா, ஹேமா மாலினி, சரிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

இந்நிலையில் ராஜ் திலக் படத்தின் தயாரிப்பாளர் அனில் சூரி காலமாகியிருக்கும் செய்தி, சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த வியாழக்கிழமை மாலை அவர் காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து பாலிவுட் திரைத்துறையினர் அனில் சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற ஹிந்தி திரைப்படமான கர்மயோகி படத்தையும் அனில் சூரி தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கமல் பட தயாரிப்பாளர் கொரோனாவால் காலமானார் | kamal hassan film producer passed away due to covid-19

People looking for online information on Anil Suri, Kamal Haasan, Raj Tilak will find this news story useful.