Corona : பிரபல நடிகர் திடீர் திருமணம்... அவரே வெளியிட்ட போட்டோ... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வரும் வேளையில், மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில், சில விஷயங்களை தள்ளி போடுவது கடினமாகவே உள்ளது. அப்படி ஒரு விஷயம் தான் திருமணம். பல்வேறு கனவுகளுடன் காத்திருக்கும் மணமக்கள் திருமணம் தள்ளி போவதினால் மிகவும் சோர்ந்து போகின்றனர். இந்நிலையில் சிலர் பாதுகாப்பான திருமணங்களை செய்வது தற்போது அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் பல வில்லன், காமெடி, குணசித்திர வேடங்களில் கலக்கிய பிரபல மலையாள நடிகர் செம்மன் வினோத் ஜோஸ். இவர் கோலிசோடா 2, Trance, சார்லி, கலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கொரோன ஊரடங்கு காரணமாக எளிய முறையில் திருமணம் செய்துள்ளார். இவர் ஒரு எழுத்தளாரும் கூட. இவரது மனைவி மரியம் ஒரு மனநல ஆலோசகர். ரிஜிஸ்டர் திருமணம் முடிந்த கையோடு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.