பிரபல நடிகருக்கு மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்... கலக்கத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் சிவாஜி ராஜா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான இவர் 400 படஙக்ளுக்கு மேல் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருந்தவர். மேலும் 4 முறை நந்தி விருது பெற்றுள்ளார்.

பிரபல நடிகருக்கு மாரடைப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்Popular actor is hospitalised due to heart attack

இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய்கிழமை இரவு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு நிலைகுலைந்து போனார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது ICU-வில் இருக்கும் அவர் உடல் நலம் சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்த அவரது நெருங்கிய நண்பரும், பிரபல PRO சுரேஷ் கொண்டெட்டி "ரத்த அழுத்தம் மிகவும் குறைந்ததால் இப்படி ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக வீட்டில் இருந்த நடிகர் சிவாஜி ராஜா விவசாயத்தில் இறங்கினார். காய்கறிகளை விளைவித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வந்தார். இந்நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Entertainment sub editor