BREAKING : பிரபல நடிகரின் பட உரிமையை பெற்றது அமேசான் பிரைம்... வெளியான அதிரடி செய்தி..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். இதனால் திரைத்துறையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகை ஜோதிகா நடிப்பில், சூர்யா தயாரிப்பில் உருவான படம் "பொன்மகள் வந்தாள்". இந்த படம் OTT ஆன்லைன் தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் அடுத்து நடிகர் மாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் மாதவன் நடிக்கும் இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட 'சார்லி' திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.