www.garudavega.com

கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர் - அவரால் எப்படி முடிந்தது ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் 5வது முறையாக வருகிற ஜூன் 30 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறையை விட சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

Popular actor completely cured on Coronavirus ft. Kiran Kumar | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர்

அதன் ஒரு பகுதியாக சென்னை 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இன்று முதல் (01/06/2020) இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் மக்களிடையே அச்சம் இருந்தாலும், நோயின் தாக்கத்தில் இருந்து  மக்கள் வீடு திரும்பும் செய்திகள் மறுபுறம் நிம்மதியை அளித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகர் கிரண் குமார் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் கொரோனா வைரஸில் இருந்து அவர் முற்றிலும் குணமாகியுள்ளார். இதுகுறித்து பாம்பே டைம்ஸ் செய்தித்தளத்துக்கு அளித்துள்ள  பேட்டியில், ''கொரோனா என் உடலை விட்டு, என் மனதை விட்டு, என் வீட்டை  விட்டு முற்றிலும் குணமாகிவிட்டது'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, ''நான் நிறைய துன்பங்களை சந்தித்தேன். நான் வாழ்க்கையை அதன் வழியில் வாழ தயாராகிக்கொண்டேன். இந்த மாதிரி பிரச்சனைகளை சந்திக்கும் போது எதனையும் ஏற்றுக்கொள்வது சிறந்தது. என் வீட்டினரிடையே எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்தேன். நான் இருக்கும் இடங்களை நானே சுத்தம் செய்தேன்'' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Popular actor completely cured on Coronavirus ft. Kiran Kumar | கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமான பிரபல நடிகர்

People looking for online information on Coronavirus, Kiran Kumar will find this news story useful.