பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை கையிலெடுக்கும் பிரபல இயக்குநர் ! ஹீரோ இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்'ஊமை விழிகள்', 'கருப்பு ரோஜா', 'உழவன் மகன்' உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் அரவிந்தராஜ். இவர் அடுத்தததாக பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் ஜெ.எம் பஷீர் என்பவர் தேவராக நடிக்கவிருக்கிறாராம். ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவர் குறித்து எழுதிய முடிசூட மன்னர் பசும்பொன் தேவர் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.
இந்த படத்துக்கு 'தேசிய தலைவர்' என்று பெடயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.