பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி கர்ப்பம் அடைந்தார்... போட்டோவுடன் வெளியான மகிழ்ச்சி செய்தி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கும், தொலைக்காட்சி நடிகை நட்டாஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார் Cricket Player Hardik Pandya shares about wife natasha pregnant

இந்நிலையில் தற்போது மனைவி நட்டாஷா கர்ப்பம் அடைந்த செய்தியை ரசிகர்களுக்கு சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஹர்திக். மேலும் கூறிய அவர் "நானும் நட்டாஷாவும் இந்த சிறப்பான பயணத்தை,மேலும் சிறப்பாக முடிவு செய்துள்ளோம். மகிழ்ச்சியாக இருவரும் சேர்ந்து ஒரு புதிய உயிரை எங்கள் வாழ்க்கையில் வரவேற்க காத்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் அந்த புதிய பக்கத்தை புரட்டி பார்க்க ஆவலாக இருக்கிறோம், உங்களுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் வேண்டும்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ் குவியத் தொடங்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார் Cricket Player Hardik Pandya shares about wife natasha pregnant

People looking for online information on Hardik Pandya, Natasha, Pregnant will find this news story useful.